கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷல் ஸ்வீட் செய்யணுமா? அப்ப 10 நிமிஷத்துல இந்த லட்டு செய்யுங்க..

Posted By:

Krishna Jayanthi Special Ladoo Recipe In Tamil: கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு படைக்க ஒரு எளிமையான ஸ்வீட்டை செய்ய நினைக்கிறீர்களா? கிருஷ்ணருக்கு லட்டு என்றால் பிடிக்கும். லட்டுவில் பல வெரைட்டிகள் உள்ளன.

அதில் மிகவும் சிம்பிளான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு லட்டு செய்ய நினைத்தால், வேர்க்கடலை பொடுக்கடலைக் கொண்டு லட்டு செய்யுங்கள். இந்த லட்டு டக்கென்று 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

Krishna Jayanthi Special Ladoo How To Make Laddu Recipe

உங்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷலாக லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் - 3
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 2 1/2 கப் நீரை ஊற்றி, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி உருகியதும், ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* ரவை நன்கு நிறம் மாறியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து 3 நிமிடம் கிளறி வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, கட்டிகள் சேராதவாறு நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* ரவையானது நீரை உறிஞ்சியதும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு வெதுவெதுப்பாக இருக்கும் போதே, அதை நன்கு பிசைந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்தால், லட்டு தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Monday, August 26, 2024, 17:51 [IST]
Desktop Bottom Promotion