Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சன்டே ஸ்பெஷல்: கமகமக்கும்... கோவில்பட்டி சிக்கன் குழம்பு
Kovilpatti Chicken Kuzhambu: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய போகிறீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் கிரேவி அல்லது குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கோவில்பட்டி சிக்கன் குழம்பு செய்யுங்கள்.
இந்த சிக்கன் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் குழம்பு செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கோவில்பட்டி சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவில்பட்டி சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 8 பல்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 6
பிற பொருட்கள்...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1/2 இன்ச்
* சோம்பு - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது
* விளக்கெண்ணெய் - 3 துளிகள்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கன் நன்கு கழுவி, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில்
வைத்து கிளறி, சிறிது நிரை ஊற்றி பச்சை வாசனை போக வதக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து
நன்கு கிளறி, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் சிக்கனை நன்கு
வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து
கிளறி, மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து, மேலே
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கோவில்பட்டி சிக்கன் குழம்பு
தயார்.
குறிப்பு
* இறுதியாக விளக்கெண்ணெய் சேர்ப்பது, குழம்பின் சுவையை
மேம்படுத்தும். விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயையும்
பயன்படுத்தலாம்.
* குழம்பு நன்கு கெட்டியாக மற்றும் க்ரீமியாக இருக்க வேண்டுமானால்,
1/2 கப் தேங்காய் பால் மற்றும் முந்திரி பேஸ்ட் அல்லது சிறிது தயிரை
சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: myediblecravings



Click it and Unblock the Notifications
