Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்
கோவைக்காயை இப்படி செய்யுங்க.. பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
Kovakkai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் கோவைக்காய் என்றாலே வேண்டாம் என்று சொல்வார்களா? அப்படிப்பட்டவர்களை கோவைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் செய்வது போன்று கோவைக்காயை செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மசாலா பொடி ஒன்றை அரைத்து சேர்த்து, வறுவல் செய்யுங்கள்.
இந்த கோவைக்காய் வறுவல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசி வேற லெவலில் இருக்கும். இப்படி கோவைக்காயை செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கோவைக்காய் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கோவைக்காய் - 1/2 கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்து அரைத்த மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் மல்லி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காஷ்மீரி
வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து 2 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, 5-6
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* 6 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காயை கிளறி விட்டு, பின்
அரைத்த பொடியை 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி
விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான கோவைக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications