Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...!
Kothavarangai Kara Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினையாகும். தினமும் ஒரே மாதிரியான சாம்பார், புளிக்குழம்பு செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் போரடிக்க தொடங்கியிருக்கும். அப்படியானால் ஒரு நாள் நெல்லை ஸ்டைல் ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் நெல்லை ஸ்டைல் கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
காரக்குழம்பு என்றால் பொதுவாக வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில்தான் செய்வார்கள். ஆனால் பலரும் சாப்பிடாத கொத்தவரங்காய் வைத்தும் சூப்பரான கார குழம்பு செய்யலாம். கொத்தவரங்காயும், சின்ன வெங்காயமும் சேர்ந்து செய்யும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு நெல்லை ஸ்டைல் கொத்தவரங்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திநெல்லை ஸ்டைல் கொத்தவரங்காய் கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கொத்தவரங்காய் - 200 கிராம் (நறுக்கியது)
- சின்ன வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தாளிப்பு வடகம் - 1 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- வெல்லம் - ஒரு சிட்டிகை
- கடுகு 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- புளியை சூடான நீரில் 15 நிமிடம் ஊறவைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடித்ததும், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- உளுத்தம்பருப்பு சிவக்கத் தொடங்கியதும், தாளிப்பு வடகத்தைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- சின்ன வெங்காயம் பொன்னிறமாகி, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- அடுத்து நறுக்கிய கொத்தவரங்காயைச் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.
- கொத்தவரங்காய் பாதி வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்ததும் புளிச்சாறு, உப்பு மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- புளியின் பச்சை வாசனை நீங்கி, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சூப்பரான கொத்தவரங்காய் கெட்டிக் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
