Latest Updates
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கையேந்தி பவன் மல்லி சட்னி.. எப்படி செய்றது.ன்னு பாருங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்...
Kothamalli Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் கொத்தமல்லி அதிகமாக உள்ளதா? அந்த கொத்தமல்லியைக் கொண்டு சட்னி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கையேந்தி பவன் ஸ்டைலில் மல்லி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே இதில் தேங்காய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. மேலும் இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். வேலைக்கு செய்பவர்கள், இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு 10 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/4 வாசி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, பெருங்காயத் தூளை தூவி, நன்கு வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலையை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்துதாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி
பவன் கொத்தமல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
