Latest Updates
-
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்..
மட்டன் பிரியாணியை மிஞ்சும் கொத்தமல்லி பிரியாணி ரெசிபி - செஞ்சு பாருங்க, டக்கரா இருக்கும்
Kothamalli Biryani Recipe in Tamil: மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கும் சமையலறையில் நீண்ட நேரம் இருக்க பிடிக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? கொஞ்சம் வித்தியாசமான ஒரு பிரியாணியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?

உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் வீடே கமகமக்கும் ஒரு பிரியாணியை செய்து கொடுத்து வீட்டிலுள்ள அனைவரையும் அசத்துங்கள். இந்த பிரியாணியானது சிக்கன், மட்டன் பிரியாணியையே தோற்கடிக்கும் வகையில் சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான கொத்தமல்லி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 1.5 கப்
- உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கட்டு
தாளிக்க:
- எண்ணெய் + நெய் - 2 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 1
- கல்பாசி - சிறிதளவு
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
- முந்திரிப் பருப்பு - சிறிது
செய்முறை:
- கொத்தமல்லியை நன்றாக கழுவி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியைக் கழுவி, குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். கொத்தமல்லித் தழைகளுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
- வெங்காயங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும், பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். சின்ன வெங்காயங்களைச் கொரகொரப்பாக அரைத்து தனியே வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துச் சூடுபடுத்தவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு மற்றும் கல்பாசி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, நன்றாக வதக்கவும். இப்போது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி இலை விழுது மற்றும் பட்டாணியைச் சேர்த்து, நன்றாக வதக்கவும். இறுதியாக, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பச்சை வாசனை போனதும் பாஸ்மதி அரிசி மற்றும் நீரைச் சேர்த்து, கொதிக்க விடவும். குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் கிளறினால் சுவையான கொத்தமல்லி பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications
