Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
10 நிமிடத்தில் சுவையான குழம்பு செய்யணுமா? அப்ப கொங்குநாடு தயிர் குழம்பு செய்யுங்க..
Kongunadu Thayir Kuzhambu: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? காரமாக சாப்பிட்டு வயிறு எரிகிறதா? காரம் குறைவான அதே சமயம் சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொங்கு பகுதியில் மிகவும் பிரபலமான தயிர் குழம்பை செய்யுங்கள்.
இந்த தயிர் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு கொங்குநாடு தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கொங்குநாடு தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூசணியை வேக வைக்க...
* வெள்ளை பூசணி - 2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 3/4 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 1/4 இன்ச்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பிற பொருட்கள்...
* தயிர் - 500 மிலி
* உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெள்ளை பூசணியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 1 கப்
நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 10
நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, பூசணியை குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், தேங்காய், பச்சை மிளகாய், வரமிளகாய்,
சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து, அதில் அரைத்த மசாலாவை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள வெள்ளை பூசணியை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க
வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதை தயிர் கலவையுடன் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறினால், சுவையான கொங்குநாடு தயிர்
குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











