Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சளியை முறிக்கும் கொங்குநாட்டு செலவு ரசம் - எப்படி செய்றது-ன்னு பாருங்க.. மறக்காம ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Kongu Special Selavu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சளி பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? அவர்களை சளியில் இருந்து விடுவிக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு ஒருமுறை கொங்குநாட்டு செலவு ரசத்தை செய்யுங்கள்.
இந்த செலவு ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். பெரும்பாலும் இந்த ரசத்தை பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள். மேலும் இந்த செலவு ரசம் குளிர்காலத்தில் குடிக்கவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கொங்குநாட்டு செலவு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு செலவு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 7
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுக்கு - 1 சிறிய துண்டு
* வரமிளகாய் - 2
* தக்காளி - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* தக்காளி - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், மல்லி, மிளகு,
கறிவேப்பிலை, சுக்கு, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 2
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடனதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ரசத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்ற வேண்டும்.
* பின் 2 தக்காளியை கைகளால் நன்கு பிசைத்து, அதையும் ரசத்துடன்
சேர்த்து, பின் பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, நுரைக் கட்டும் வரை சூடேற்றி இறக்கினால்,
சுவையான கொங்குநாட்டு செலவு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
