Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அப்புறம் எல்லா வாரமும் செய்வீங்க...!
Kongu Special Chicken Fry in Tamil: ஞாயிறுக் கிழமை என்றாலே அசைவ உணவுகள்தான். பொதுவாக சண்டே அன்று சிக்கன், மட்டன், மீன் மற்றும் நண்டு என பலவிதமான அசைவ உணவுகளால் பெரும்பாலான வீடுகள் நிறைந்திருக்கும். இதில் மற்ற உணவுகளை விட சமைப்பதற்கு மிகவும் எளிதானது சிக்கன்தான். விலையிலும் சரி, சுவையிலும் சரி சிக்கன் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதாக உள்ளது.
சிக்கனை பல்வேறு வழிகளில் சுவையாக சமைக்கலாம். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவல். இதை கிரேவியாகவும் சாப்பிடலாம் அல்லது சுக்காவாகவும் சாப்பிடலாம். இந்த பதிவில் கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- இடித்த பூண்டு - 10 பல்
- வர மிளகாய் - 10
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- சின்ன வெங்காயம் 25
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தக்காளி - 1
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- சோம்பு - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைக்க:
- வரக்கொத்தமல்லி- 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- சோம்பு - அரை ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 4 இலவங்கம்
செய்முறை:
- ஒரு கடாயில் வரக்கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும், இது ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் சோம்பு ,இடித்த பூண்டு ,வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- அதன்பின் மஞ்சள் சேர்த்து பின்னர் சிக்கன் சேர்த்து வதக்கவும். சிக்கன் ஓரளவிற்கு வெந்ததும் அரைத்து வைத்திருந்த மசாலா பொடிசேர்த்து தேவையான அளவு உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் சிக்கனை மூடி வைத்து வேக வைக்கவும்
- சிக்கன் நன்கு வெந்ததும் பின் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சூப்பரான கொங்கு ஸ்பெஷல் கோழி வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications





