Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
Kongu Onion Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் சைடு டிஷ்ஷாகவும் செய்வார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி என்று ஒரே மாதிரியான சட்னியை தான் செய்வீர்களா?

சற்று வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொங்குநாடு வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட்டால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கொங்குநாடு சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, குறைவான தீயில்
வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், புளி, பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் பொடித்த
வெல்லத்தை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கொங்கு சின்ன
வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications