Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புரட்டாசியில் கொண்டைக்கடலையை வெச்சு ஒருவாட்டி இப்படி பிரியாணி செய்யுங்க.. நான்வெஜ் பிரியாணியே தோத்துடும்..
Kondaikadalai Biryani Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து சத்தாக சமைத்து கொடுப்பீர்களா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்ப்பீர்களா? ஆனால் என்ன தான் கொண்டைக்கடலையை வேக வைத்தோ அல்லது வேறு எப்படி செய்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொண்டைக்கடலை கொண்டு பிரியாணி செய்து கொடுங்கள்.
இந்த கொண்டைக்கடலை பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.

உங்களுக்கு கொண்டைக்கடலை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* பட்டை - 4 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 1
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 6
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
பிரியாணிக்கு...
* கொண்டைக்கடலை - 1 கப்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 2
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரக சம்பா அரிசி - 2 கப் (நீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 3 கப்
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை சுடுநீரில் 5-6 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை
ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொண்டைக்கடலையை மிக்சர் ஜாரில்
போட்டு ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஈரமில்லாத மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியை
சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்
நெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த புதினா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகி, மசாலாவின்
பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு தூவி,
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஒன்றிரண்டாக அரைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, 3
கப் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற
வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரிசியை ஒருமுறை கிளறி விட்டு
மூடி, பின் மற்றொரு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் இந்த
பிரியாணி பாத்திரத்தை வைத்து, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் தம்
போட்டு இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications