Latest Updates
-
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா? -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும் -
சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் பார்வை..12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்... -
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும்
குளிர்காலத்தில் கொள்ளு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சளி, தலை பாரம் தொல்லையே இருக்காது!
Kollu Sambar Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் உங்கள் வீட்டில் உள்ளோர் சளி, இருமல், தலைவலியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால், அந்த கொள்ளு பருப்பைக் கொண்டு சாம்பார் செய்து கொடுங்கள். இந்த கொள்ளு சாம்பார் மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இதை அடிக்கடி குளிர்காலத்தில் செய்து சாப்பிடும் போது, சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கொள்ளு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கொள்ளு - 60 கிராம்
* மல்லி விதை - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 8
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொள்ளு பருப்பை நீரில் கழுவி, நீரை வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய கொள்ளு பருப்பை
சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், மிளகு,
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் கொள்ளு பருப்பு மற்றும் வறுத்த பொருட்களை
சேர்த்து, அத்துடன் புளி, துருவிய தேங்காய் சேர்த்து முதலில் நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள்
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சத்தான மற்றும் சுவையான கொள்ளு சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
