Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
இந்த கூழை வாரம் 2 முறை குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க..
Kollu Koozh Recipe In Tamil: நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் டயட்டில் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும் சத்தான சிறுதானிய கூழை தயாரித்து குடித்து வாருங்கள். அதுவும் அந்த சிறுதானியத்துடன், உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளுவை சேர்த்து கூழ் தயாரிக்கும் போது, உடல் எடையும் வேகமாக குறையும்.
முக்கியமாக இந்த கூழை வாரத்திற்கு 2 முறை உட்கொண்டு வந்தாலே, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அதோடு இந்த கூழை உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம். ஏன் குழந்தைகளுக்கு கூட வாரம் ஒருமுறை இந்த கூழை கொடுக்கலாம்.

உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு கூழை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 1 கப்
* கொள்ளு - 3/4 கப்
* கறிவேப்பிலை - 4 கொத்து
* தண்ணீர் - 3 கப் + 2 கப்
* மிளகு - 15 (தட்டி பொடித்தது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை சேர்த்து, நல்ல
மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு விதைகளுடன், கறிவேப்பிலை
சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த கொள்ளு பொடியை சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை கழுவி சேர்த்து, அதன் பின் அதில்
தட்டி வைத்துள்ள மிளகு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து
1 விசில் விட்ட பின், குறைவான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, நன்கு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் 1 கப் தயிரை ஊற்றி, அதில் சிறிது
கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்து மோராக செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அந்த மோருடன் சீரகத் தூளை சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் வேக கொள்ளு வரகரிசியை எடுத்து, அதில் பொடியாக
நறுக்கிய வெங்காயம் மற்றும் அடித்து வைத்துள்ள மோரை சேர்த்து,
வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறினால், சுவையான கொள்ளு
கூழ் தயார்.



Click it and Unblock the Notifications