Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க..
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
Kerala Style Meal Maker Sukka Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான சுக்காவை செய்யுங்கள். இந்த கேரளா சோயா சுக்கா சுவையாக இருப்பதோடு அதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

பொதுவாக சுக்கா என்றால் சிக்கன் அல்லது மட்டனை வைத்துதான் செய்வோம், ஆனால் சோயாவை வைத்தும் ஒரு சூப்பரான சைடிஷை செய்யலாம். இது தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். ஒருதடவை இதை முயற்சி செய்து விட்டால் அதற்குப்பின் வாரம் ஒருமுறை செய்வீர்கள்.
உங்களுக்கு சுவையான கேரளா ஸ்டைல் சோயா சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சோயாவை ஊறவைக்க:
- 1 கப் மீல் மேக்கர்
- 3 கப் தண்ணீர்
- ஒரு சிட்டிகை உப்பு
பிற பொருட்கள்:
- 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 இன்ச் பட்டை
- 2 கிராம்பு
- 1 பச்சை ஏலக்காய்
- 1 கப நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 கீறிய பச்சை மிளகாய்
- ½ கப் பொடியாக நறுக்கிய தக்காளி
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ ஸ்பூன் மிளகுத் தூள்
- ¼ ஸ்பூன் கரம் மசாலா
- ½ ஸ்பூன் சோம்புத் தூள்
- ½ ஸ்பூன் சீரகத் தூள்
- ½ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறுதளவு தண்ணீர்
- 1ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 2 எலுமிச்சைத் துண்டு
செய்முறை:
- முதலில் மீல் மேக்கரை நன்றாக கழுவவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் அலசிய மீல் மேக்கர் மற்றும் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் 8 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வேகவைத்த மீல் மேக்கரை ஒரு வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரில் நன்றாக அலசவும். பின்னர் அதை நன்றாக பிழிந்து நீரை வெளியேற்றவும்.
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, அவை வெடிக்கும் வரை அல்லது சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் மெலிதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வேகமாக வதங்க ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும், நீளமாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் வேக வைத்த சோயா துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- குறைவான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் சிறிது நேரம் வேகவைக்கவும்.
- அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும். நன்கு ட்ரை ஆனதும் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் சுவையான கேரளா ஸ்டைல் சோயா சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications
