Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரளா ஸ்பெஷல் நேந்திரம் பழம் பஜ்ஜி
Kerala Special Nendram Pazham Bajji: தற்போது அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் அதிகம் விளையாடுவார்கள். அதிகம் ஓடி விளையாடுவதால், அவர்களுக்கு நிறைய பசிக்கும்.
சில குழந்தைகள் அடிக்கடி ஏதாவது சாப்பிட கேட்பார்கள். சில சமயங்களில் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட கேட்பார்கள். இந்நிலையில் உங்கள் வீட்டில் நேந்திரம் பழம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரளாவில் மிகவும் பிரபலமான நேந்திரம் பழ பஜ்ஜியை செய்து கொடுங்கள். இந்த பஜ்ஜி மாலை வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். கேரளாவில் இதை பழம் பொரி என்று அழைப்பர். உங்களுக்கு இந்த நேந்திரம் பழ பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரளா ஸ்பெஷல் பழம் பொரி அல்லது நேந்திரம் பழ பஜ்ஜியை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த நேந்திரம் பழம் - 3-4
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1-2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* சோடா உப்பு/சமையல் சோடா - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நேந்திரம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய
நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள்
தூள், சீரகம், ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி கட்டிகளின்றி, மிகவும் நீராகவும் இல்லாமல்,
மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், நேந்திரம் பழத் துண்டுகளை எடுத்து, தயாரித்து
வைத்துள்ள பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து நேந்திரப் பழத்
துண்டுகளையும் மாவில் பிரட்டி பொரித்து எடுத்தால், சுவையான கேரளா
ஸ்பெஷல் நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.
குறிப்பு:
* பொதுவாக அரிசி மாவை இதில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் பஜ்ஜி
மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால், சிறிது அரிசி மாவை சேர்த்துக்
கொள்ளலாம்.
* ஏலக்காய் வாசனை பிடிக்குமானால், சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்துக்
கொள்ளலாம்.
* நேந்திரம் பழத்தின் இனிப்புச் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* சமையல் சோடாவை சேர்ப்பது எல்லாம் ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது.
ஆனால் சமையல் சோடா சேர்க்காவிட்டால் பஜ்ஜி தட்டையாக இருக்கும். சமையல்
சோடா சேர்த்தால், பஜ்ஜி நன்கு உப்பி இருக்கும்.



Click it and Unblock the Notifications