Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
Keerai Molagootal Recipe in Tamil: மனிதர்களின் மிகப்பெரிய செல்வமே அவர்களின் ஆரோக்கியம்தான். ஆரோக்கியமான வாழ்க்கையின் தொடக்கமே நமது உணவில் இருந்துதான் தொடங்குகிறது. நம் உணவுகளில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொண்டால்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கியமான உணவுகள் என்று வரும்போது எப்போதும் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஒவ்வொரு கீரையும் ஒரு குறிப்பிட்ட சத்துக்களை வழங்குகிறது. பொதுவாக கீரையை பொரியல் அல்லது சூப் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் கீரையை வைத்து பல சுவையான உணவுகளை செய்யலாம். அதில் ஒன்றுதான் கீரை மிளகூட்டல். கீரையை இந்த ஸ்டைலில் செய்தால் அதை சாதத்தில் ஊற்றியே சாப்பிடலாம்.
மதியம் சமையலை டக்குனு அதேசமயம் ஆரோக்கியமானதாக செய்ய விரும்புகிறவர்கள் கீரையை இந்த ஸ்டைலில் செய்யலாம். கீரையை இப்படி செய்வது சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையுமே கொடுக்கும்.
உங்களுக்கு சத்தான கீரை மிளகூட்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை மிளகூட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 கப் கீரை
- ¼ கப் துவரம் பருப்பு
- தேவையான அளவு உப்பு
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 சிவப்பு மிளகாய்
- ¼ கப் தேங்காய் துருவியது
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
செய்முறை:
- பருப்பை நன்றாகக் கழுவி, நன்கு குழையும் வரை வேகவைக்கவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாயை சேர்த்து வதக்கவும். பருப்பு நிறம் மாறியதும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.
- தேங்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற வைத்து அவற்றை மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு வாணலியில், மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து, கீரையின் அளவு குறைந்து அது மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
- வேக வைத்த கீரை ஆறியதும் அதை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும் .
- அரைத்த கீரை மற்றும் கலவை, உப்பு மற்றும் சமைத்த பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை ஒரு கொதி நிலைக்குக் கொண்டு வந்து, பின்னர் சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை கீரை மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான கீரை மிளகூட்டல் ரெடி!



Click it and Unblock the Notifications
