Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
எந்த கீரை வாங்கினாலும் இப்படி கூட்டு செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Keerai Kootu Recipe In Tamil: வாரம் ஒருமுறையாவது உணவில் கீரையை சேர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த கீரையில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையை கொண்டது. ஆனால் பலருக்கு எந்த கீரையை எப்படி சமைப்பது என்று தெரியாது.

அப்படியே செய்தாலும் கீரையை பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட நினைத்தால், கூட்டு செய்து சாப்பிடுங்கள். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு தேங்காய் அரைத்து சேர்த்து கூட்டு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும்.
முக்கியமாக இந்த பக்குவத்தில் செய்யும் கூட்டு ரெசிபிக்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்படி கீரை கூட்டு செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு கீரை கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கீரை - 1 கப் (உங்களுக்கு பிடித்தது)
* பாசிப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4-5 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டேபிள்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும்.
* அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கீரை கூட்டு ரெடி!!!



Click it and Unblock the Notifications
