Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
வீட்ல கத்திரிக்காய் இருந்தா இப்படி தொக்கு செய்யுங்க... கத்திரிக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
Kathirikkai Thokku Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தினமும் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் குருமா போன்றவற்றையே தொடர்ந்து செய்வது நிச்சயம் விரக்தியை ஏற்படுத்தும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொக்கு செய்வது சரியான தீர்வாக இருக்கும்.
தொக்கை குழம்பாகவும் சாப்பிடலாம் அல்லது சைடிஷாகவும் சாப்பிடலாம். உங்களுக்கு கத்திரிக்காய் பிடிக்குமென்றால் நிச்சயம் கத்திரிக்காய் தொக்கு உங்களின் பிரச்சினையை தீர்க்கும் ஒன்றாக இருக்கும். இந்த கத்திரிக்காய் தொக்கு சாதம், இட்லி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

கத்திரிக்காயை இந்த மாதிரி தொக்கு செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் தொக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பிஞ்சு கத்திரிக்காய் - 15
- பெரிய வெங்காயம் - 2
- பெரிய தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- சாம்பார் பொடி- 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வறுத்த வேர்க்கடலை - 25 கிராம்
- வறுத்த எள்- 2 ஸ்பூன்
- வெல்லம்- 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி
செய்முறை:
- முதலில் தக்காளி, பெரிய வெங்காயம், பூண்டு, வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை, வறுத்த எள் ஆகியவற்றை மிக்ஸியில் மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் முழு கத்திரிக்காயை அப்படியே வைத்துக் கொள்ளவும்.
- தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் அந்த கத்திரிக்காயை எண்ணையில் சிறிது நேரம் வறுக்கவும், கத்திரிக்காய் கலர் மாறிய உடன் எடுத்து தனியாக வைத்து விடவும் .
- பின் அதே எண்ணையில் சீரகம், மிளகு போட்டு வெடித்தவுடன் , அரைத்து வைத்து உள்ள மசாலாவை போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, தானியத்தூள் போட்டு வதக்கவும்.
- பின்னர் அதனுடன் புளி தண்ணிர் உப்பு போட்டு,வறுத்து வைத்து உள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
- தீயை மிதமாக வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் வரை வேக விடலாம்.
- பின் வெல்லம் சேர்த்து .நன்றாக கலந்து கத்திரிக்காய் உடையாமல் புரட்டி வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
- இது சாதத்துடன் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
