Latest Updates
-
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? -
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்ற ராசிகளை விட அதிக காம உணர்வு கொண்டவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...
3 கத்திரிக்காயும், 4 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எல்லாத்துக்கும் பக்காவா இருக்கும்..
Kathirikkai Thakkali Kadaiyal Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று காரசாரமாகவும், ருசியாகவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், தக்காளியும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி கடையலை செய்யுங்கள்.

இந்த கடையல் இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கடையல் செய்வதற்கு சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த கடையலை செய்தால், அடிக்கடி செய்வீர்கள்.
இந்த ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி கடையல் குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* வரமிளகாய் - 10
* பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 7-8
* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், 3 பச்சை மிளகாய் மற்றும் 10 வரமிளகாயை சேர்த்து நன்கு ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கத்திரிக்காயை மென்மையாகும் வரை வதக்கி வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூளையும்
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்கி இறக்கி, கடையலுடன் சேர்த்து கலந்தால், சுவையான
ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி கடையல் தயார்.



Click it and Unblock the Notifications