Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தோசை, சப்பாத்திக்கு இந்த கத்திரிக்காய் மசாலா கறி செஞ்சு பாருங்க... எல்லாரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Kathirikkai Masala Gravy Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்களா? அப்படியெனில் அதற்கு என்ன சைடிஷ் என்ன செய்ய வேண்டுமென்பது கூடுதல் கவலையாக இருக்கலாம். வழக்கமான சட்னி அல்லது குருமா செய்து போரடித்து விட்டதா? ஆம் எனில், இந்த கத்திரிக்காய் மசாலா கறியை செஞ்சு பாருங்க.
இந்த செட்டிநாடு ஸ்பெஷல் கத்திரிக்காய் மசாலா கறி சப்பாத்தி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். கத்திரிக்காயை இதுபோன்று மசாலா சேர்த்து சமைக்கும் போது கத்திரிக்காயை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் எளிமையான மற்றும் அற்புத சுவை கொண்டிருக்கும் கத்தரிக்காய் மசாலா கறியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மசாலா விழுது அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- முழு தனியா - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 6
- பூண்டு - 6 பற்கள்
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2
- வர மிளகாய் - 5
- மிளகு - 1 ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 2
- தேங்காய் - 1/2 கப் துருவியது
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
கத்திரிக்காய் மசாலா கறி செய்ய:
- கத்திரிக்காய் - 1/2 கிலோ
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- பட்டை - 1
- கிராம்பு - 4
- கறிவேப்பில்லை - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி, முழு தனியா, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் காய்ந்த மிளகாய், முழு மிளகு, தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் இந்த மசாலாவை ஆற விடவும்.
- ஆறிய மசாலாவை மிக்ஸியில் போட்டு, முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து, உப்பு சேர்க்கவும். அதில் கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும்.
- பின்னர் தனியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பில்லை, கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- பின் இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- பின்னர் கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா கறி ரெடி!



Click it and Unblock the Notifications
