Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் வித்தியாசமான கதம்ப சட்னி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும்
Kathamba Chutney Recipe in Tamil: நம்முடைய பிரதான காலை உணவான இட்லி, தோசைக்கு எத்தனை வகை சட்னி, சாம்பார் கண்டுபிடித்தாலும் பத்தாது. ஏனெனில் காலம் காலமாக நாம் இட்லி, தோசையை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிட்டு வருகிறோம். எனவே தொடர்ச்சியாக ஒரே மாதிரியான சட்னிகள் செய்து சாப்பிடுவது நிச்சயம் இட்லி, தோசையை வெறுக்க வைக்கும்.

எனவே புதுப்புது சட்னியை செய்வது அவசியமாகும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் ஒரு சட்னிதான் கதம்ப சட்னி. இந்த கதம்ப சட்னி பல வழக்கமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் வித்தியாசமான சட்னியாகும். இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பழுத்த தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
- புளி - ஒரு சிறிய துண்டு
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- புதினா - 1 கொத்து
- கொத்தமல்லி - 1 கொத்து
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து வதக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறத் தொடங்கியதும், அதில் வர மிளகாய் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தோலுரித்து வைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கடைசியாக தக்காளி மற்றும் துருவிய தேங்காய், தேவையான உப்பு மற்றும் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
- அடுப்பை அணைத்து விட்டு அதில் கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். இலைகள் சுருங்கியதும் நன்றாக கலக்கவும். இந்த கலவையை நன்றாக ஆற விடவும்.
- இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும். சூடான இட்லி, தோசை அல்லது பணியாரத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடவும்!



Click it and Unblock the Notifications
