Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தக்காளி சட்னி செய்யும் போது இந்த 1 பொருளை கொஞ்சம் அதிகமா சேத்துக்கோங்க.. ருசியானதும், சத்தானதும் கூட...
Karuppu Ulundhu Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசை என்றால் பெரும்பாலும் சட்னியை தான் அதிகம் செய்வீர்களா? அதுவும் தக்காளி சட்னியைத் தான் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை தக்காளி சட்னி செய்வதாக இருந்தால், இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே, இதில் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்ப்பது தான்.
இப்படி கருப்பு உளுத்தம் பருப்பை சேர்ப்பதால், இந்த சட்னி ருசியாக இருப்பதோடு, சத்தும் அதிகரிக்கும். கருப்பு உளுத்தம் பருப்பு இடுப்பு எலும்பை வலுவாக்க உதவுகிறது. எனவே இந்த கருப்பு உளுந்து கொண்டு சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடும் போது, உடல் வலுபெறும். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இந்த சட்னியை எளிதில் செய்யலாம்.

உங்களுக்கு கருப்பு உளுந்து தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 4 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நிறம் மாற வறுக்க
வேண்டும்.
* பின் அதில் 5 வரமிளகாய், 4 பூண்டு பற்கள், 1 கொத்து கறிவேப்பிலை
ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய 3 தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கருப்பு உளுந்து தக்காளி சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
