Latest Updates
-
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க..
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Karthigai Deepam Nei Appam Recipe In Tamil: கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக இந்நாளில் முருகப்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் பிடித்தமான பல்வேறு இனிப்புகளைப் படைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடிய முக்கியமான பிரசாதங்களில் ஒன்று தான் நெய் அப்பம்.

இந்த நெய் அப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பாகும். இந்த நெய் அப்பத்தை பலவாறு செய்வார்கள். அதில் ஒரு எளிய முறை தான் ரவை மற்றும் கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய நெய் அப்பம். இந்த அப்பத்தை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.
உங்களுக்கு இந்த நெய் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சிறிது
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* நறுக்கிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து
கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து கட்டிகளின்றி
கலந்து மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த ரவை கலவையை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் எள்ளு விதைகளை
சேர்த்து வறுத்து, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் சிறிது நெய்யை ஊற்றி, கலந்து வைத்துள்ள கலவையை குழிகளில்
ஊற்றி, குறைவான தீயில் வைத்து, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக
வைத்து எடுத்தால், சுவையான நெய் அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
