Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
கர்நாடகா புகழ் வித்யார்த்தி பவன் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த மாதிரி தேங்காய் சட்னி அரைங்க..செமையா இருக்கும்!
Karanataka Vidyarthi Bhavan Style Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த டிபனுக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் ஒரு மூடி தேங்காயும், பொட்டுக்கடலையும் உள்ளதா? அப்படியானால் கர்நாடகா பேமஸ் வித்யார்த்தி பவன் தேங்காய் சட்னியை செய்யுங்கள்.
கர்நாடகாவில் வித்யார்த்தி பவன் என்பது மிகவும் புகழ் பெற்ற ஒரு உணவகமாகும். இங்கு நீங்கள் சாப்பிட வேண்டுமென்றால் நீண்ட நேரம் காத்திருந்து சாப்பிட வேண்டும். இங்கு மக்கள் குவிவதற்கு காரணம் அங்கு பரிமாறப்படும் மசாலா தோசையும், ஸ்பெஷல் தேங்காய் சட்னியும்தான். இந்த ஸ்பெஷல் தேங்காய் சட்னியை சாப்பிடுவதற்கு நீங்கள் இனி கர்நாடகாவிற்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அந்த சூப்பரான சட்னியை உங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இப்படி தேங்காய் சட்னி செய்யும் போது, தேங்காய் சட்னி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே இதில் சேர்க்கப்படும் ஒருசில கூடுதல் பொருட்கள்தான். இந்த பக்குவத்தில் செய்யும் போது, தேங்காய் சட்னியின் சுவையே வேற லெவலில் இருக்கும்.
உங்களுக்கு வித்யார்த்தி பவன் ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வித்யார்த்தி பவன் ஹோட்டல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் துருவிய தேங்காய்
- அரை கப் பொட்டுக்கடலை
- சிறிதளவு புளி
- 4 பச்சை மிளகாய் (அல்லது உங்கள் காரத்திற்கு ஏற்ப)
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- ஒரு இன்ச் இஞ்சி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- அரை டீஸ்பூன் கடுகு
- 1 வரமிளகாய்
- 1 ஸ்பூன் சமையல் எண்ணெய்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் இரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை போடவும், பின்னர் துருவிய தேங்காயை சேர்க்கவும்.
- பின்னர் வதக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மிக்ஸி ஜாரில் போடவும்.
- பின்னர் துருவிய இஞ்சியை சேர்க்கவும், அதன்பின் புளியை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- பொட்டுக்கடலை, தேங்காயை கொரகொரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தேவையான அளவு அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியாக மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டினால் வித்யார்த்தி பவன் ஸ்பெஷல் தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
