Latest Updates
-
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
Karnataka Surakkai Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி தேங்காய் சட்னி அல்லது கார சட்னி சாப்பிட்டு போரடிக்குதா? புதிதாக ஏதாவது சூப்பரான சட்னி அரைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் கர்நாடகா ஸ்டைல் சட்னிகளை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்யும் சட்னி சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டுமா? உங்க வீட்டில் சுரைக்காய் இருந்தா போதும் அதைவைச்சு ஒரு சூப்பரான சட்னி செய்யலாம். எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா சுரைக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 10 சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 அங்குல இஞ்சி
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 கப் நறுக்கிய சுரைக்காய்
- 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- கொத்தமல்லி இலைகள்
- 2 ஸ்பூன் தேங்காய்
- தேவையான அளவு உப்பு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு தண்ணீர்
தாளிக்க:
- 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு வாணலியில் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். கடுகு சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருக்கவும். பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதன்பின் வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். சில நொடிகள் வதக்கிவிட்டு, ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதன்பின் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வறுத்த பொட்டுக்கடலை மற்றும் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் நறுக்கிய சுரைக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். சுரைக்காய் மென்மையாகும் வரையிலும், அதிலுள்ள ஈரப்பதம் வற்றும் வரையிலும் கிளறவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, அதை முழுமையாக ஆறவிடவும்.
- கலவை ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான சட்னியாக அரைக்கவும்.
- இந்த சட்னியை அப்படியே தயாரித்து வைத்த தாளிப்பில் கொட்டி நன்கு கிளறினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் சுரைக்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
