Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும்
Karnataka Style Onion Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், வெங்காயமும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் வெங்காயசட்னியை செய்து விடலாம்.

இதுவரை நீங்கள் வழக்கமான வெங்காய சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி வழக்கமான வெங்காய சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த வெங்காய சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா வெங்காய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 25 சின்ன வெங்காயம்
- 1 நடுத்தர அளவு தக்காளி
- 4 வர மிளகாய்
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- சிறிதளவு வெல்லம்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாகக் கழுவி நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் வறுக்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும். அதன்பின், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்றாக குழைந்து போகும் வரை வதக்கவும்.
- தக்காளி குழைந்ததும் அடுப்பை அணைத்து கலவை ஆற விடவும். கலவை ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாய், உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னியில் ஊற்றி நன்கு கிளாரிந்தால் சுவையான கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
