Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Karnataka Pavakkai Puli Kulambu Recipe in Tamil: காய்கறிகளிலேயே பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய்தான். ஆனால் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது பாகற்காயில்தான். பாகற்காயை பெரும்பாலான மக்கள் வெறுப்பதற்கு காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். ஆனால் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் நிச்சயம் தங்கள் உணவில் பாகற்காயை அடிக்கடி அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காயை தவிர்க்கவும் முடியாது, கசப்பாகவும் சாப்பிட முடியாது என்பவர்களுக்கு பாகற்காயை கசப்பு இல்லாமல் சமைத்து சாப்பிடுவதுதான் ஒரே வழி. பொதுவாக பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள், சிலசமயங்களில் சாம்பார் வைப்பார்கள். ஆனால் பாகற்காயை கசப்பே தெரியாமல் சுவையாக சமைக்க ஒரே வழி அதை புளிக்குழம்பு வைப்பதுதான். அதிலும் வழக்கமான புளிக்குழம்பு போல அல்லாமல் கர்நாடகா ஸ்டைலில் வைச்சு பாருங்க. டேஸ்ட் கசப்பே இல்லாமல் அட்டகாசமா இருக்கும்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் பாகற்காய் புளிக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் பாகற்காய் புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- எள் - 1 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - அரை கப்
- வர மிளகாய் - 6
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
- வெல்லம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- முதலில் பாகற்காயை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடையை சூடாக்கி அதில் வெந்தயம், சீரகம், உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளை சேர்த்து வறுக்கவும்.
- உளுந்தம் பருப்பு நிறம் மாறியதும் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
- தேங்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடவும்.
- கலவை ஆறியதும் இதை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, வர மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
- பின்னர் அரைத்த மசாலா, புளிச்சாறு, வெல்லம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். குறைந்த தீயில் 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- குக்கரைத் திறந்து குழம்பின் பதத்தை சரிபார்க்கவும். குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications