Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
கர்நாடகா ஃபேமஸ் தும்கூர் சட்னி.. இந்த சட்னியை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Karnataka Famous Tumkur Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா?
அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் தும்கூர் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி பச்சை நிறத்தில் இருப்பதால், பலரும் புதினா சட்னி என்று நினைக்கலாம். ஆனால் இதன் சுவை வேற லெவலில் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.

உங்களுக்கு கர்நாடகா ஃபேமஸ் தும்கூர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஃபேமஸ் தும்கூர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 3
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய்
மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், பெருங்காயத் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் வறுத்த
உளுத்தம் பருப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கர்நாடகா ஃபேமஸ் தும்கூர்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
