Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
தோசைக்கல்லில் ஆம்லெட் போட்டால் அது சாதாரண முட்டை ஆம்லெட். அதுவே கரண்டியில் போட்டால் அது தான் கரண்டி ஆம்லெட். இந்த கரண்டி ஆம்லெட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடலாம்.
தினமும் முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மட்டுமின்றி, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் முட்டையை ஆம்லெட் செய்து சாப்பிடுவார்கள். தோசைக்கல்லில் ஆம்லெட் போட்டால் அது சாதாரண முட்டை ஆம்லெட். அதுவே கரண்டியில் போட்டால் அது தான் கரண்டி ஆம்லெட். இந்த கரண்டி ஆம்லெட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடலாம்.

கரண்டி ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரண்டி ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டை கலவையை கொஞ்சம் ஊற்றி பொன்னிறமாக வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் மீதமுள்ள முட்டை கலவையை கரண்டியில் ஊற்றி வேக வைத்து எடுத்தால், கரண்டி ஆம்லெட் தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
