Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஈவ்னிங் நேரத்துல காராமணியை வெச்சு இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்...
Karamani Vada Recipe In Tamil: தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழை பொழியும் போது, அதுவும் ஈவ்னிங் நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். அப்படி தோன்றும் போது, பெரும்பாலும் வடை, பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவோம்.
இன்று நீங்கள் காபி, டீ குடிக்கும் போது ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், வழக்கமாக செய்யும் பருப்பைக் கொண்டு வடை செய்யாமல், காராமணியைக் கொண்டு வடை சுடுங்கள். இந்த காராமணி வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு காராமணி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காராமணி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காராமணி - 1 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு கொதிக்க வைத்த சுடுநீரில் போட்டு மூடி
வைத்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, காராமணியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற
வைத்த காராமணியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடல் 1/2 டீஸ்பூன் சோம்பு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த காராமணியை எடுத்துக் கொண்டு,
அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி, தட்டையாக வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு,
முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்தையும் வடைகளாக தட்டிப் போட்டால், காராமணி வடை
தயார்.
Image Courtesy: WeRecipes



Click it and Unblock the Notifications