Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Karamani Murungakkai Kuzhambu Recipe In Tamil: மதியம் சாதத்துக்கு வாய்க்கு ருசியான அதே சமயம் ஈஸியாக செய்யக்கூடியவாறான ஒரு குழம்பு செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காராமணியும், முருங்கைக்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு வீடே மணக்கும் வகையில் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை செய்தால், மதியம் சாதத்துடன் மட்டுமின்றி, இரவு இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு காராமணி முருங்கைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காராமணி முருங்கைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* காராமணி - 1/2 கப்
* பூண்டு - 5
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 5 (அரைத்தது)
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த காராமணி
* தேங்காய் விழுது
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3 பத்தை (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் காராமணியை எடுத்துக் கொண்டு, அத்துடன் பூண்டு,
தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம் மற்றும்
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு எலுமிச்சை அளவு புளியை எடுத்து, அதில் நீரை ஊற்றி ஊற வைத்து,
சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி
விட வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காயை சேர்த்து,
கத்திரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து நன்கு
5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வேக வைத்த காராமணி, அரைத்த தேங்காய்
விழுது மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, 3 நிமிடம் கொதிக்க
வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காராமணி
முருங்கைக்காய் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
