Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
காரைக்குடி வெண்டைக்காய் புளி பச்சடி ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்
Karaikudi Vendakkai Puli Pachadi Recipe in Tamil: வெண்டைக்காய் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி சமைக்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். பெரும்பாலான மக்களுக்கு பிடித்த மற்றும் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். ஏனெனில் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் உள்ளது. வெண்டைக்காயை பொதுவாக சாம்பார் அல்லது புளிக்குழம்பு வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவோம்.

ஆனால் காரைக்குடி வட்டாரத்தில் வெண்டைக்காயை வைத்து ஒரு சுவையான பச்சடி செய்வார்கள். பொதுவாக பச்சடி என்றால் மாங்காய் அல்லது கத்தரிக்காய் போன்றவற்றை காய்கறிகளை வைத்துதான் செய்வார்கள். ஆனால் வெண்டைக்காயை வைத்தும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பச்சடி செய்யலாம். இந்த வெண்டைக்காய் புளி பச்சடி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு காரைக்குடி ஸ்டைல் வெண்டைக்காய் புளி பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி வெண்டைக்காய் புளி பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ வெண்டைக்காய்
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் அரிசி மாவு
- 2 வர மிளகாய்
- சிறிதளவு வெல்லம்
- 2 பச்சை மிளகாய்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
- வெண்டைக்காயை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, வர மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறி வெண்டைக்காய் மென்மையாகும் வரை வதக்கவும்.
- வெண்டைக்காய் வெந்தவுடன் புளிக்கரைசல், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். அதன் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும்.
- கொதிக்கும் சமயத்தில் அரிசி மாவை நீரில் கலந்து ஒரு கரைசலை தயாரிக்கவும்.
- இந்த கரைசலை கொதிக்கும் பச்சடியில் சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கிளறவும்.
- பின்னர் வெல்லத்தை சேர்த்து கலக்கவும்.
- வெல்லம் நன்கு கரையும் வரை கிளறவும்.
- 5 நிமிடம் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான காரைக்குடி ஸ்டைல் வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி!



Click it and Unblock the Notifications
