Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
இட்லி, தோசைக்கு ஏற்ற காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Karaikudi Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சட்னி தான் பிடிக்குமா? பெரும்பாலும் நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி என்று தான் செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை இட்லி, தோசைக்கு சட்னி செய்வதாக இருந்தால், காரைக்குடி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இது பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இந்த காரைக்குடி கார சட்னியை ஒருமுறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு காரைக்குடி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 15 பல்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 20
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 15 பூண்டு பற்களை எடுத்து, அத்துடன்
சிறிய எலுமிச்சை அளவு புளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 5 வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து வதக்க
வேண்டும்.
* மறுபுறம் மிக்சர் ஜாரில் 2 தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து,
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தக்காளி விழுதை வதங்கி கொண்டிருக்கும் வெங்காயத்துடன்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான காரைக்குடி கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications