Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
காய்கறியே இல்லாத கிராமத்து ஸ்டைல் லட்சுமி குழம்பு ரெசிபி... இதை செஞ்சு வீட்ல எல்லாரையும் அசத்துங்க...!
இந்த குழம்பு பெயர் லட்சுமி குழம்பு தான். பொதுவாகவே வீட்டில அம்மா சாயங்கால நேரத்துல அது இல்ல இது இல்லைனு சொல்ல கூடாதுன்னு சொல்வாங்க. நம்ம தாத்தா பாட்டி எப்பவுமே வீட்ல பொருட்கள் இல்லைன்னாலும் அத இல்லைன்னு சொல்லாம வாங்கனும்னு தான் சொல்லனும்னு சொல்வாங்க.
அதுக்கு காரணம், வீட்ல இல்லைனு சொல்லும் போது, அது இல்லாமலே போயிடும்னும், வீட்ல இருக்க லட்சுமி வெளிய போய்டுவாங்கனும் அவங்க நம்பின காரணத்துனால தான். அதனால வீட்ல காய்கறி இல்லைன்னு சொல்லாம சொல்ற குழம்பு தான் இந்த லட்சுமி குழம்பு. ஆமாங்க, இந்த லட்சுமி குழம்ப வீட்ல காய்கறி இல்லாத நேரத்துல செய்றது. இந்த சுவையான குழம்பை ஈஸியா எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 20 பல்
மிளகாய் பொடி - ½ டேபிள் ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து
கொள்ளவும்)
மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
தனியா தூள் - ¼ டீ ஸ்பூன்
சாம்பார் தூள் - ½ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ¼ டீ ஸ்பூன்
வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - ½ மூடி
செய்முறை:
- புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ வைத்து கொள்ளவும்.
- துருவிய தேங்காய் உடன் சீரகம், சோம்பு, மற்றும் மிளகு சேர்த்து
அரைத்து கொள்ளவும்.
- பூண்டை தோல் நீக்கி வைத்து கொள்ளவும். நன்றாக பழுத்த தக்காளியை
பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
- பொரிந்ததும் கருவேப்பிலையை சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு
பெருங்காயத்தை சேர்க்கவும்.
- அதன் பின் பூண்டு சேர்த்து நன்கு நன்கு சிவக்கும் படி
வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், மற்றும் தனியா
தூள் சேர்த்து கிளறிவிடவும்.
- அதில் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்ததும் அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்தால் காய்கறி இல்லாத லட்சுமி
குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications
