கம்பு மாவும், 1 பிடி முருங்கைக்கீரையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட

Posted By:

Kambu Murungaikeerai Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு மாவும், முருங்கைக்கீரையும் உள்ளதா?

அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு சத்தான மற்றும் ருசியான ஒரு அடையை செய்து சாப்பிடுங்கள். இந்த அடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Kambu Adai How To Make a Kambu Murungaikeerai Adai Recipe

உங்களுக்கு கம்பு முருங்கைக்கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு முருங்கைக்கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* வறுத்த கம்பு மாவு - 2 கப்
* முருங்கைக்கீரை - 3/4 கப் (நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு

சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 1 பல்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காயை சேர்த்து வதக்கி, வறுத்த வேர்கடலையை நறுக்கி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் வறுத்த கம்பு மாவை சேர்த்து நன்கு 5 நிமிடம் கட்டிகளின்றி தொடர்ந்து கிளறி விட்டு இறக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்.
* மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், அதில் பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரையை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால், சிறிது உப்பையும் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பட்டர் ஷீட் அல்லது ஈரத் துணியில் வைத்து தட்டையாக அடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள அடையை சேர்த்து, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கம்பு முருங்கைக்கீரை அடை தயார்.
* அடுத்து இந்த அடைக்கு அற்புதமான மற்றும் சிம்பிளான சட்னியை செய்யுங்கள். அதற்கு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், வரமிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கம்பு முருங்கைக்கீரை அடைக்கு இந்த மாதிரி தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால், சுவை அள்ளும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க...

[ of 5 - Users]
Story first published: Friday, September 12, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion