Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...
Kambu Adai Dosa Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசிக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு கொண்டு அருமையான சுவையில் அடை தோசை சுடுங்கள்.

இந்த கம்பு அடை தோசை சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராது. இந்த கம்பு அடை தோசையை வாரம் ஒருமுறை சாப்பிட, எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.
இந்த கம்பு அடை தோசை குறித்து அபூர்வாஸ் நளபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கம்பு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கம்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கம்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, கம்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர்
ஜாரில் கம்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு,
ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும்
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து 1
நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்த கம்புடன் சேர்த்து நன்கு கிளறி, அடை
மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள அடை மாவை தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்
வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கம்பு அடை
தோசை தயார்.



Click it and Unblock the Notifications
