Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Kaima idli recipe : கைமா இட்லி
மீதமான இட்லியை கொண்டு இதுவரை நீங்கள் இட்லி உப்புமா செய்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு இட்லி உப்புமா பிடிக்காவிட்டால், அந்த மீதமான இட்லியைக் கொண்டு கைமா இட்லி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் காலையில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அந்த இட்லியை கொண்டு இதுவரை நீங்கள் இட்லி உப்புமா செய்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு இட்லி உப்புமா பிடிக்காவிட்டால், அந்த மீதமான இட்லியைக் கொண்டு கைமா இட்லி செய்யுங்கள். இந்த கைமா இட்லி மிகவும் சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதோடு இதை செய்வதும் சுலபம்.

உங்களுக்கு கைமா இட்லி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கைமா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி - 5
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் இட்லியை துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து, தேவையான அளவு உப்பைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணி சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இட்லித் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கைமா இட்லி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications