Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Javvarisi Upma Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசையை டிபனாக சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோரும், பிள்ளைகளும் வித்தியாசமான டிபனை கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு காலை டிபனை செய்யுங்கள். அது தான் ஜவ்வரிசி உப்புமா.

இந்த உப்புமா மற்ற உப்புமாவைப் போன்று இல்லாமல், சுவையில் பிரமாதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த உப்புமா 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த உப்புமா சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
உங்களுக்கு இந்த ஜவ்வரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ஜவ்வரிசி - 1 கப் (ஊற வைத்தது)
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* ஜவ்வரிசி நன்கு ஊறிய பின், அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு ஓரளவு வெந்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து நன்கு 5 நிமிடம்
மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி உப்புமா/ஜவ்வரிசி கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications