Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
தோசை மாவு இல்லாத நேரத்தில் 1 கப் ஜவ்வரிசி இருந்தா.. 15 நிமிடத்தில் மொறுமொறுன்னு தோசை செய்யலாம் தெரியுமா?
Javvarisi Dosa Recipe In Tamil: காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு அற்புதமான சுவையில் மொறுமொறுவென்று தோசை சுடலாம் தெரியுமா?
இந்த ஜவ்வரிசி தோசை ரவா தோசையைப் போன்றே நல்ல சுவையைக் கொண்டிருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த ஜவ்வரிசி தோசை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஜவ்வரிசியை போட்டு
மிதமான தீயில் வைத்து நன்கு வெள்ளையாகும் வரை வறுத்து இறக்கி குளிர
வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த ஜவ்வரிசி பொடியை சேர்த்து, அத்துடன்
பச்சரிசி மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை
நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் மசித்து போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து, அதையும் மாவுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு நீர் போன்று
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி,
வெங்காயம், துருவிய கேரட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், இன்னும் கொஞ்சம் நீரை ஊற்றி, ரவா
தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, தவா நன்கு
சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை கல்லில் அள்ளி ஊற்றி, எண்ணெய் ஊற்றி
மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
ஜவ்வரிசி தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
