Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
காலையில் 1 கப் ஜவ்வரிசி வெச்சு ஒருடைம் இந்த மாதிரி இட்லி சுடுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Javvarisi Carrot Idli Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி சுடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி இட்லி செய்தால், ஒரு கட்டத்தில் இட்லியைக் கண்டே வீட்டில் உள்ளவர்கள் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமான இட்லிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அப்படி என்ன வித்தியாசமான இட்லியை செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.
உங்கள் வீட்டில் 1 கப் ஜவ்வரிசி இருந்தால் போதும், பஞ்சி போன்று மிருதுவான இட்லியை சுடலாம். இந்த ஜவ்வரிசி இட்லியுடன் கேரட்டை துருவி சேர்த்து செய்யும் போது சுவை பிரமாதமாக இருப்பதோடு, உடலுக்கும் நல்லது. இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி கேரட் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி கேரட் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி - 1 கப்
* தண்ணீர் - 2 கப் (ஊற வைப்பதற்கு)
* வறுத்த ரவை - 3/4 கப்
* தயிர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கேரட் - 2 (துருவியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை எடுத்து நீரில் ஒருமுறை கழுவிவிட்டு,
அதில் 2 கப் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த ஊற வைத்த ஜவ்வரிசியுடன், ரவை, தயிர்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் மூடி வைத்து ஊற
வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு
சேர்த்து, சிறிது உப்பு தூவி சிறிது நேரம் வதக்கி இறக்கி, அதை
ஜவ்வரிசியுடன் சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அத்துடன் பேக்கிங் சோடா, துருவிய கேரட் சேர்த்து, இட்லி மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தயாரித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில்
வைத்து 12-15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி கேரட்
இட்லி தயார்.



Click it and Unblock the Notifications