Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
Iyengar Style Murungaikkai Thokku Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை வெண்டைக்காய் தொக்கை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த முருங்கைக்காய் தொக்கும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த முருங்கைக்காய் தொக்கு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 முருங்கைக்காய்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 6 பூண்டுப் பல் (நசுக்கியது)
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1 ஸ்பூன் தனியா தூள்
- ¼ தேக்கரண்டிஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் ¼ ஸ்பூன் கடுகு மற்றும் ¼ ஸ்பூன் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அவை வெடிக்கத் தொடங்கியதும், ¼ ஸ்பூன் பெருங்காயம், சிறிதளவு கறிவேப்பிலைகள் மற்றும் நசுக்கிய 6 பூண்டுப் பற்கள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். மிதமான தீயில், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய 2 பெரிய தக்காளியையும், நறுக்கிய முருங்கைக்காயையும் சேர்த்துக்கொள்ளவும். மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும்.
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தனியா தூள் சேர்க்கவும். மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை, மிதமான தீயில் தொடர்ந்து சமைக்கவும்.
- தொக்குக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- சரியான பதம் வருவதற்கு மற்றும் முருங்கைக்காய்கள் வேக, சுமார் ¼ முதல் ½ கப் வரை தண்ணீர் சேர்க்கவும்.
- தொக்கு கொதிக்கத் தொடங்கியதும், மூடி வைத்து 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- தொக்கு நன்கு கெட்டியாகி, முருங்கைக்காய் வெந்ததும், ஓரங்களிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெடி. இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
