Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Kovakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதிய வேளையில் எப்போதும் ஒரு பொரியலை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி கேரட் பீன்ஸ் பொரியல், உருளைக்கிழங்கு பொரியல் என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? ஆனால் அந்த கோவைக்காயை உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிடமாட்டார்களா?

அப்படியானால் அவர்களுக்கு இந்த பக்குவத்தில் கோவைக்காய் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி செய்தால் கிலோ கணக்கில் செய்தாலும் கேட்டு விரும்பி சாப்பிட்டு காலி செய்வார்கள். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த கோவைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கோவைக்காய் - 400 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவைக்காய் மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* கோவைக்காய் வேக நேரம் எடுக்கும் என்பதால், மூடி வைத்து வேக
வையுங்கள். முக்கியமாக அப்படி மூடி வைத்து வேக வைக்கும் போது,
அவ்வப்போது மூடியைத் திறந்து காயை கிளறி விட வேண்டும்.
* கோவைக்காய் நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் நன்கு
மாறியிருக்கும்.
* அப்படி கோவைக்காயின் நிறம் மாறிவிட்டால், அதில் மிளகாய் தூள்,
மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
கிளறி வேக வைத்து இறக்கினால், கோவைக்காய் பொரியல் தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் கோவைக்காய் பொரியலில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள் : 55-65 kcal (மிக மிகக் குறைவான கலோரி கொண்டது)
* புரதச்சத்து : 1.2 - 1.5 கிராம்
* கார்போஹைட்ரேட் : 4 - 5 கிராம்
* நார்ச்சத்து : 3 - 3.5 கிராம் (அதிக நார்ச்சத்து)
* கொழுப்பு : 3.5 - 4 கிராம் (பயன்படுத்தப்படும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயிலிருந்து)



Click it and Unblock the Notifications
