Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் ரவை இருந்தா போதும்.. காலையில 10 நிமிஷத்துல சூப்பர் டிபன் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Rava Idli Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு எதுவும் இல்லையா? சப்பாத்தி, பூரி போடலாம் என்றால், அதற்கும் மாவு இல்லையா? ஆனால் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு 10 நிமிடத்தில் ஒரு சூப்பரான டிபன் செய்யலாம்.
இந்த டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த இட்லி, வேர்கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ரவா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தயிர் - 1/4 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவையை எடுத்து, அத்துடன் 1/4 கப்
தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தினுள் வைக்குமாறான ஒரு தட்டை எடுத்து,
அதில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, ஒருமுறை தட்டை
தரையில் தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அழகான தோற்றத்திற்காக மேலே சிறிது மிளகாய் தூளைத் தூவி, அந்த
தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து,
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அது நன்கு குளிர்ந்த பின் அதை ஒரு தட்டில் தட்டி எடுத்துக்
கொள்ள வேண்டும். பின்பு, அந்த இட்லியை கத்தியால் பிட்சா போன்ற
தோற்றத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இந்த இட்லி துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா இட்லி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications