Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பருப்பு இல்லாமலே சூப்பரா இட்லிக்கு சாம்பார் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Idly Sambar Without Dal Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு சட்னியைத் தான் அதிகமாக செய்வீர்களா? அப்படியே சாம்பார் செய்தாலும் பருப்பு பயன்படுத்தி தான் செய்வீர்களா? ஆனால் பருப்பு பயன்படுத்தாலேயே இட்லிக்கு சாம்பார் செய்யலாம் தெரியுமா?
இந்த சாம்பார் கிராமப்புறங்களில் உள்ள ஹோட்டல்களில் அதிகம் செய்யப்படுவதுண்டு. இப்படியான சாம்பார் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் பருப்பு இல்லாத சமயங்களில் இந்த சாம்பாரை செய்யுங்கள்.

உங்களுக்கு பருப்பு இல்லாமல் இட்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு இல்லாமல் செய்யக்கூடிய இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 3 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை
மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை ஒரு
பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மத்து கொண்டு
குக்கரில் உள்ளதை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் அதில் எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மசித்து வைத்துள்ளதை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதி வந்ததும், அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு கடலை மாவை நீர் ஊற்றி கட்டிகளின்றி கரைத்து, சாம்பாருடன்
சேர்த்து நன்கு கிளறி, சாம்பார் சற்று கெட்டியாகத் தொடங்கும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் கெட்டியாகத் தொடங்கியதும், பெருங்காயத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கலந்து இறக்கினால், சுவையான பருப்பு சேர்க்காத
இட்லி சாம்பார் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications