Latest Updates
-
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Idli Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனா? அந்த இட்லிக்கு எப்போதும் போன்ற சுவையில் சைடு டிஷ் ஷ் செய்து போடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வெங்காயம், த்க்காளி, பொட்டுக்கடலை கொத்தமல்லியை சேர்த்து வதக்கி நன்கு அரைத்து, தேவையான அளவு நீரை ஊற்றினால், இட்லி தண்ணி சட்னி தயார்.

உங்களுக்கு இட்லி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேய்டுமா? கீழே இட்லி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முயை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என் று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1 கையளவு
* துருவிய தேங்காய் - 1 கையளவு
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து 2
நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி வாணலியின் சூட்டில் வேக
வைத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், இட்லிக்கு ஏற்ற சட்னி தயார்.
Image Courtesy: youtube@SherinsKitchen



Click it and Unblock the Notifications
