Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இட்லிக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்யாம.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க..
Idli Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் இட்லி தான் காலை டிபனாக இருக்குமா? எப்போது இட்லி செய்தாலும், அதற்கு சட்னி, சாம்பார் தான் சைடு டிஷ்ஷாக இருக்குமா? இப்படி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் இட்லிக்கு குருமாவை செய்யுங்கள். இப்படி இட்லிக்கு குருமா செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இந்த குருமாவை ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.

உங்களுக்கு இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 6 பெரிய பல்
* இஞ்சி - 3 துண்டு
* பச்சை மிளகாய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 8
* தண்ணீர் - சிறிது
குருமாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, இஞ்சி
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் சோம்பை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மற்றொரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ,
கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான இட்லி குருமா தயார்.



Click it and Unblock the Notifications