Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி செய்யாம.. ஒரு டைம் இந்த குருமாவை ட்ரை பண்ணுங்க.. டக்கரா இருக்கும்..
Idli Dosa Kurma Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் என்று செய்யாமல், குருமாவை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இட்லி தோசை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி தோசை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 4
* கல்பாசி - சிறிது
* தக்காளி - 2
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
வதக்கி அரைப்பதற்கு..
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 4
* தேங்காய் - 3/4 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7-8
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து, வெங்காயம் நன்று கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து நன்கு
தேங்காயில் இருந்து மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, கல்பாசி
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து, தக்காளி நன்கு குலையும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு குலைந்தும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, 10 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கினால்,
சுவையான இட்லி, தோசை குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
