Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும்
Hyderabadi Paruppu Kulambu Recipe in Tamil: தினமும் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார், குழம்பு என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் தக்காளியும், பருப்பும் மட்டும்தான் உள்ளதா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான பருப்பு கூட்டை செய்யுங்கள்.

இந்த ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் செய்வீர்கள். அந்த அளவிற்கு எளிமையாகவும், செய்வதற்கு சுலபலமாகவும் இருக்கும்.
உங்களுக்கு ஈஸியான ஆந்திரா ஸ்டைல் பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துவரம்பருப்பு
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கப் நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 3 கீறிய பச்சை மிளகாய்
- டேபிள் ஸ்பூன் புளி விழுது
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 5 பல் நசுக்கிய பூண்டு
-1 ஸ்பூன் சீரகம்
- ஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
செய்முறை:
- துவரம்பருப்பை நன்றாக கழுவி, 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- பருப்பு நன்றாக ஊறியதும் அதை ஒரு குக்கரில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து அழுத்தம் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் அதை நன்றாக கடைந்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கலந்து வேகவைத்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நசுக்கிய பூண்டைச் சேர்த்து, அது லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் சீரகம் மற்றும் கடுகை சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரியும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, வர மிளகாய் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் உடனடியாக பருப்பின் மீது கொட்டி நன்றாக கிளறவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைக் சேர்த்து, சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications