Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பன்னீர் இருந்தா.. ஒருவாட்டி இந்த மாதிரி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..
Hyderabadi Paneer Masala Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு பன்னீர் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் பன்னீர் சைடு டிஷ்ஷை செய்யாமல், சற்று வித்தியாசமாக சைடு டிஷ் செய்யுங்கள்.
அதுவும் ஹைதராபாதி பன்னீர் மசாலாவை ஒருமுறை ட்ரை செய்யுங்கள். இப்படி பன்னீர் மசாலாவை செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு இந்த பன்னீர் மசாலாவை அடிக்கடி செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள்.

உங்களுக்கு ஹைதராபாதி பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - சிறிது
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி
சேர்த்து 4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கசூரி மெத்தி சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லி, புதினா மற்றும் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை
ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை
சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
ஹைதராபாதி பன்னீர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
