Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
காளான் வாங்குனா.. இந்த பக்குவத்துல செய்யுங்க.. சிக்கன், மட்டனை மறந்துடுவாங்க...
Hyderabadi Mushroom Gravy Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் இனிமேல் விடுமுறை நாட்களில் பலரது வீடுகளில் சைவ உணவுகள் தான் இருக்கும். அசைவ உணவு வேண்டுமானால், சைவ உணவுகளை அசைவ உணவின் சுவையில் சமைத்து சாப்பிட வேண்டும். அப்படி அசைவ உணவுகளின் சுவைக்கு இணையான சுவையைக் கொண்டது தான் காளான்.
இந்த காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். எப்படி செய்வதாலும், அதன் சுவை அருமையாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்வதாக இருந்தால், இந்த சைடு டிஷஷை செய்யலாம். இது தவிர சாதம், புலாவ் போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு ஹைதராபாதி காளான் கிரேவியை எப்படி செய்வதென்று எதெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி காளான் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 400 கிராம்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸபூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிப்பில்லாத தயிர் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* வெங்காயம் - 2 (பொன்னிறமாக ப்ரை செய்தது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் காளானை எடுத்து, நீரில் கழுவி, சற்று பெரிய துண்டுகளாக
வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த காளானுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
சோம்புத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிப்பில்லாத தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட்,
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக ப்ரை செய்த
வெங்காயத்தை சேர்த்து, நீர் எதுவும் சேர்க்காமல் கைகளால் நன்கு கிளறி
விட்டு, மூடி வைத்து குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 15 நிமிடம்
மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத்
திறந்து காளானை கிளறி விட வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து அடுப்பை அணைத்தால், சுவையான
ஹைதராபாதி காளான் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications